Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள்.

இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் இந்த வருடம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரை முன்பதிவு https://www.shriamarnathjishrine.com என்ற இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரிகர்களுக்கு காப்பீட்டுத் தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |