பக்தர்கள் இல்லாததால் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, மடப்புரம், தாயமங்கலம் மற்றும் கொல்லங்குடி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஊரடங்கு காரணமாக வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிகளுக்கு வெளியே நின்றபடி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.
இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் இல்லாததால் கோவிலில் அமைந்துள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் இடைகாட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் அன்று நடைபெற இருக்கும் திருப்பள்ளி நிகழ்ச்சிக்கு அரசு தடைவிதித்தால் திருப்பலி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.