நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. எனவே ஒருசில மாநிலங்களவை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கொரோனா சற்று குறைந்த நிலையில் வழிபாட்டு தளங்ககளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து கோவில்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்திய நிலையில் ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் மூலமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.