Categories
மாநில செய்திகள்

பக்தர்களே…! இதை மட்டும் செய்யாதீங்க… கோவில் நிர்வாகம் முக்கிய வேண்டுகோள்…!!!!

கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்16ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது.

வரும் 14ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார். கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. அது பரிசீலனை செய்யப்படும். கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின்போது GPS முறையில் அழகர் எங்கு உள்ளார்.

எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதேபோன்று ‘மதுரை காவலன்’ என்ற ‘மொபைல் ஆப்’ வழியாகவும், கோயில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலமாகவும் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சாமிக்கு தண்ணீர் பீய்ச்சுவதை பாரம்பரிய முறைப்படி, ஆட்டுத்தோல் மூலமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் அழுத்தம் அதிகமாகி சாமி சிலை சேதாரம் அடைவதால் பக்தர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Categories

Tech |