Categories
தேசிய செய்திகள்

“பக்தர்களே இதை யாரும் நம்ப வேண்டாம்”… மோசடியில் ஈடுபடும் கும்பல்… வேண்டுகோள் விடுத்த தேவஸ்தானம்…!!!!

திருப்பதி தேவஸ்தானம் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு பக்தர் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 166 மட்டும் செலுத்தினால் சென்னை பெங்களூர், கோவை, உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்து வரப்படுவார்கள்.

பின்னர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்படும், அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தரிசனம் முடிந்த பிறகு அவர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என அந்த விளம்பரத்தில் கூறியுள்ளது. இந்த விளம்பரம் குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த திருப்பதி தேவஸ்தானம் அதிர்ச்சி அடைந்தது.

இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில் நேரடியாக வரும் விஐபி களும் மற்றும் அவர்களுடைய சிபாரிசு கடிதங்களை கொண்டு வருபவர்களும் மட்டுமே விஐபி தரிசனம் பெற முடியும். இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கும் அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கும் விஐபி தரிசனம் டிக்கெட் வழங்கப்படமாட்டாது. இது போன்ற விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரூபாய் 10,500 செலுத்தி யார் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இந்த டிக்கெட் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. இந்த டிக்கெட்டை பெற்றவர்களுக்கு விஐபி தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து கொடுக்கிறது. இது தவிர மற்ற எந்த விளம்பரங்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |