Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில் நாளை படித்திருவிழா….வெளியான தகவல்….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது.

இரவு 10 மணி வரை கோவில் நடைதிறந்து இருக்கும். மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. 1-ந் தேதி காலை 6:00 மணிக்கு, கோவில் நடை திறந்து, இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை அடுத்து பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |