Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே!…. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியி தரிசனம் செய்வதற்கான கட்டண டிக்கெட்டுகளை நாளை 20-ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் மின்னணு முறையில் நடத்தப்படும் குலுக்கல் வாயிலாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் அல்லாது நேரடியாக முன்பதிவு செய்யலாம் என்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் 2 டோஸ் பரிசோதனை செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழைக் கொண்டுவருவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |