Categories
ஆன்மிகம் கோவில்கள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க… திருப்பதி தேவஸ்தானம் செம அறிவிப்பு…!!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அவ்வகையில் காணொலிக் காட்சி மூலமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகின்றது. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

அதுமட்டுமன்றி கூடுதலாக கட்டணம் செலுத்தி 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும் மார்ச் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் காணொளி காட்சி முறையில் நேற்று முன்தினம் பதினோரு மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும். அதுமட்டுமன்றி கல்யாண உற்சவ டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே 90 நாட்களுக்குள் தேவஸ்தானம் இலவச விரைவு தரிசனத்தை அளிக்கும்.

Categories

Tech |