Categories
தேசிய செய்திகள்

பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய்… வைரலாகும் அற்புத வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி கைகுலுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சித்தேக்கில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. அங்கு பல நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்தக் கோவிலில் பக்தர்கள் வந்து செல்லும் படிக்கு மேலே உயரத்தில் அமர்ந்து கொண்ட நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி கைகொடுக்கிறது. பக்தர்களும் ஆர்வத்துடன் நாயுடன் கைகுலுக்கி செல்கின்றனர்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் அது வைரலாகி வருகிறது. நாயுடன் கைகுலுக்குவதற்காகவே சிலர் அந்த கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

Categories

Tech |