உத்திரபிரதேசத்தில் பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சாலையில் நின்று கொண்டிருந்த கால்நடையின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் “தசரா பண்டிகை நாளில் நடந்த இந்த துயர சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது” என எனக் கூறியுள்ளார்.