Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! திருப்பதியில் இடைவேளை நேரம் மாற்றம்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடைவேளை நேரத்தை மாற்றி திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, காலை 5 – 8 மணி வரை இடைவேளை நேரம் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதிதாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இடைவேளை மாற்றப்பட்டுள்ளது. டிச. 1முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ள நிலையில், இலவச தரிசனம் பெறுவோர் இனி விரைந்து தரிசனம் பெறலாம். காத்திருக்கும் நேரம் குறையும்.

Categories

Tech |