திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.