Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! திருப்பதியில் இன்று இது ரத்து…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, பகல் 12 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் இன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |