மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற இன்று முதல் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.