தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கட்ப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தேங்காய், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொண்டு வரவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.