ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமிகள் ஒருவராக அறியப்படுகிறார். இந்நிலையில் திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் விழா துவங்க உள்ளது.
இதை முன்னிட்டு மின்சார பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும் திருப்பதி திருமலை மலைப்பாதையில் ஒலெக்ட்ரா நிறுவனபேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மின்சார பேருந்து சேவையை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் துவக்கி வைக்க உள்ளார்.