பக்தர் ஒருவரின் மெயிலுக்கு பக்தி சேனல் ஒன்றிலிருந்து ஆபாச லிங்க் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக, திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரில் நடத்தி வரும் பக்தி சேனலில் கேட்டுள்ளார். இதையடுத்து பக்தி நிகழ்ச்சி தொடர்பான லிங்கை அனுப்புவதாக கூறியுள்ள சேனல் ஊழியரிடம், தன்னுடைய மெயில் ஐடி-யை அந்த பக்தர் கொடுத்துள்ளார். இந்நிலையில் பக்தி சேனலில் இருந்து பக்தரின் மெயிலுக்கு லிங்க் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை கிலிக் செய்து பார்த்த பக்தருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த லிங்க் ஆபாச இணைய தளத்திற்கானது ஆகும்.
இதனால் கோபமும், பேரதிர்ச்சியும் அடைந்த அந்த பக்தர், திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன், மற்றும் ஊழியர் உட்பட அதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த அதிர்ச்சியான நிகழ்வு தெலுங்கு தேசம் கட்சியினரை போராட்டத்திற்கு தூண்டியுள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினரால் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய விசாரணையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் வேலைப்பார்க்கும் ஊழியர் ஒருவர் தினமும் ஆபாசப்பட வீடியோக்களை பணி நேரத்தில் பார்த்து வந்ததால் அவர் தவறாக இந்த லிங்கை அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.