தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்கள் கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை.
இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக சோனி மியூசிக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2 வருட காத்திருப்புக்கு பின்னர் வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ட்ரெய்லரில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.