சேலம் மாவட்டத்தில் பால சுப்பிரமணியன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற உள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வட சென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த கோவிலில் வருகிற 28-ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தினந்தோறும் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடி சுவாமியை மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்து வருகிறார்கள்.