Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழாவை முன்னிட்டு… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் கணேசபுரம் மாரியம்மனுக்கு பங்குனி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கணேசபுரத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பச்சை பட்டாடையில் மாரியம்மன் காட்சியளித்தார்.

மேலும் விழாவையொட்டி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவிலில் சிறப்பு ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. மேலும் கோவிலில் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை கண்குளிர தரிசித்தனர்.

Categories

Tech |