Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் கடந்த 23-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து மின்னொளி தேரோட்டம் மற்றும் பொங்கல் வைபம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 9-ஆவது நாள் திருவிழாவான நேற்று முன்தினம் அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், ஆயிரம் கண் பானை வழிபடுதல், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் சுமந்து வருதல், அலகு குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின் முத்துமாரி அம்மன் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |