Categories
சினிமா

பங்கு விற்பனையில் பாண்டம் எப்எக்ஸ் நிறுவனம்?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் முன்னணி காட்சிக் கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுதும் பல்வேறு திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. தற்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை 40கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான விரிவாக்கத்திற்கு பாண்டோம் எப்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய இதன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பிஜோய் அற்புதராஜ், எதிர் காலத்தில் மிக பிரம்மாண்டமான அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல்படைத்த தொழில்களாக இவை இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னையிலும், மும்பையிலும் இப்போது 25ஆயிரம் சதுரடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும்.

விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய்பீம் ஆகிய இந்தியா சினிமாவின் வெற்றிப் படங்கள் பலவற்றிற்கு விஎப்எக்ஸ் காட்சிக் கலையை இந்நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப் படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் விஎஃப்எக்ஸ் காட்சிக் கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்த நிலையில் பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரஜினிகாந்த் கூறியதாவது, இந்நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான எஸ்எம்ஈ ஐபிஓ-விற்குள் முதன் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் என்எஸ்ஈ-எம்மெர்ஜ் தளத்தில் இணைந்துள்ளது என்று கூறினார். பங்குச் சந்தையின் வாயிலாக கணிசமான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். பங்குச்சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய விஎப்எக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் பாண்டம்எஃபெக்ஸ் தான் என அவர் கூறினார்.

Categories

Tech |