கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலரும் உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவரான ரஞ்சித் பகதூர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று திணை வயலுக்கு அந்தப் பையனை பெண் தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும் அதனால் தான் அவர்களிடம் அந்தப் பெண் அகப்பட்டு இருப்பாள். ஏன் குறிப்பிட்ட இடங்களில் இதுபோன்ற பெண்கள் பிணமாக கண்டெடுக்கப்படுகின்றனர். பொதுவாக தினை, கரும்பு, சோளம் போன்றவற்றில் தான் சடலமாக பெண்கள் கண்டெடுக்க படுகின்றனர். மற்றபடி கோதுமை அல்லது அரிசி போன்ற வயல்வெளிகளில் அவர்கள் சடலமாகக் கிடப்பது இல்லை. ஏனென்றால் அவை 3 அடிதான் வளரும் கம்பு, சோளம், தினை போன்றவை ஆள் உயரத்திற்கு வளரும்.
அதோடு பாலியல் வன்கொடுமை நடந்ததற்கு அல்லது சடலத்தை இழுத்துச் சென்றது போல் எந்த ஒரு சாட்சிகளும் இல்லை. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர்கள் தக்க சமயத்தில் விடுதலை செய்யப்படவில்லை எனில் மன ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்பட்டு பெரும் தண்டனை அனுபவிப்பார்கள். நாடு முழுவதும் இச்சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் கூறிய கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது