கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்த பின்னர் கர்நாடக பாஜக மேலிட பார்வையாளர் தர்மேந்திரா பிரதான் பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் புதிய முதல்வராக அறிவித்தார். இதையடுத்து இன்று பசவராஜ் கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார்.