Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்”…. பழ வியாபாரியை பாராட்டிய எம்.பி கனிமொழி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து ‘பசித்தால் எடுத்து சாப்பிடவும்’என்று இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறார். நேற்று அவரை நேரில் சந்தித்த கனிமொழி எம்பி அவரை பாராட்டியதுடன் புத்தகங்களை பரிசளித்தார்.

Categories

Tech |