Categories
உலக செய்திகள்

பசியால் ஏற்பட்ட கொடுமை… பறிபோன சிறுவனின் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

11 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 11 வயதான ரோமன் லோபஸ் என்ற சிறுவன் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று ஒருநாள் மாயமானார் . இதுதொடர்பாக  சிறுவனின் பெற்றோர் காவல்துறையில்  புகார்  அளித்துள்ளனர் . இதனையடுத்து காணாமல்போன சிறுவன் தனது குடியிருப்பின் அருகே குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். பிரேதபரிசோதனையில் சிறுவன் பட்டினி கிடந்து நீரிழப்புடன் இறந்ததாக தெரியவந்துள்ளது .

இதனைத் தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தாயான லிண்ட்சே  பைபர்(38) மற்றும் தந்தை பைப்பர் (36) சிறுவனை சித்ரவதை படுத்தியதால் அவர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது . மேலும் சிறுவனின் வளர்ப்பு தாயான லிண்ட்சே  பைபர் மீது குடிநீரில் நச்சுக் கலந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது . ஆனால் அவர் மகனை காணாமல் புகார் அளித்ததாகவும் போலீசார் அதனை  ஏற்காமல் மெத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் .

சுமார் 15 மணி நேரத்திற்கு பின் மகனை சடலமாக மீட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனது சிறுவன் மரணம் பற்றி போலீசார் எந்த தகவலும் குறிப்பிடவில்லை என்றும்  போலீசாருக்கு யார் மீதும் சந்தேகமுமில்லை ஏதாவது நடக்கக்கூடாது நடந்திருந்தால்  என்று கூறி ஆத்திரம் அடைந்துள்ளார். அனால் போலீசார் இந்த விவகாரத்தை குறித்து சந்தேகம் இருப்பதாகவும் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்

Categories

Tech |