நாம் உணவு உண்பதற்கு முதலில் பசியை உணருகிறோம். ஆனால் அந்த பசியில் ஏழு வகை உள்ளதாம். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.
பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. உணவு உண்ணும்போது உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். எந்த ஒரு கவன சிதறல் இல்லாமல் உணவின் மீது முழு கவனம் செலுத்தி உணவை நாம் உண்ண வேண்டும். அப்படி பசியில் பலவகை உண்டு. பொதுவாக நம்மை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நாம் உணவை கட்டுப்படுத்த வேண்டும். நாள்பட்ட நோய்கள், தூக்கமின்மை பிரச்சனை, மனச்சோர்வு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நம் பசியானது நம் உடலின் மனம், இதயம், கண்கள், மூக்கு, வாய், செல்கள் மற்றும் வயிறு போன்ற வெவ்வேறு உறுப்புகளுடன் தொடர்படுகிறது.
மன பசி
முதலில் நாம் பார்க்கப்போவது மன பசி நம் உணர்வுடன் தொடர்புடையது. நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற வடிவத்தில் மன பசி உருவாகும். இதில் தீங்கு என்னவென்றால் நேரத்திற்கு தகுந்தாற் போல் நமது உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண செய்யும். இது உடலுக்கு மிகவும் கேடு தரும்.
இருதய பசி,
உணர்ச்சிவசப்படுவதால் இருதய பசி ஏற்படுகிறது. இது பொதுவாக நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்கள் காரணமாக ஏற்படும். எதிர்மறையான உணர்ச்சிகள் ஏற்படும் நேரத்தில் உங்கள் உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். உணவு நமது இதயத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும் அல்லது சில நேரங்களில் ஏற்படும் வலி உணர்வுகளை தடுக்க கூடியது.
கண்பசி
சில உணவுகளை பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுவது தான் கண்பசி. சிலருக்குப் பிடித்தமான ஹோட்டல்களை சமைக்கும் உணவுகளை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டும் என்று தோன்றும். கோவம், சோகம் போன்ற உணர்ச்சிகள் வரும் போது உணவு உண்ண வேண்டும் என்று தோன்றுவதை விட, அந்த நேரங்களில் மற்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடலாம்.
மூக்கு பசி
மூக்கு பசி இது பசிக்காக சாப்பிடாமல் பிடிப்பதற்காக சாப்பிட ஒரு உணர்வு. நாம் வாசனைகளை அறிந்துகொள்ளும்போது அதை சாப்பிட வேண்டுமென்று தோன்றும் உணர்வுதான் உன் மூக்கு பசி. சாப்பிடுவதற்கு முன் உணவுகளை முகர்ந்து விட்டு அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை குறித்து நீங்கள் யோசிப்பது தான்.
வாய் பசி
வாய் என்பது பல விதமான சுவைகளை கொண்டுள்ளது. திடீரென்று குளிர்பானம் குடிக்க தோன்றும். சுவையான உணவு உண்ண தேடும். சூடாக ஏதாவது ரசிக்க தோன்றும் போன்ற எண்ணங்களை வாய்ப்பை நமக்கு உணர்த்தும், இதனை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.
செல்லுலார் பசி
பசி என்பது நமது உடலில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளாத போது நம் உடல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண தூண்டும். பொதுவாக அசைவ உணவுகளை அது தேடும் அப்படி இருப்பதுதான் இது.
வயிற்றுப்பசி
வயிற்றில் நமக்கு ஒருவித சத்தம் ஏற்படும். இந்த சத்தம் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ண வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும். குறிப்பாக நாம் மூன்று வேளை உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் இது தோன்றும். இது நாம் உண்ணும் நேரத்தை நினைவு படுத்த உதவும்.
நீங்கள் உண்மையிலேயே பசியாய் உணர்ந்தால் அந்த நேரத்தில் சாப்பிடுவதை பழக்கப்படுத்துங்கள். நீங்கள் உணவினை உட்கொள்ளும் போது சில கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். ருசிக்காக சாப்பிடுகிறீர்களா அல்லது ஊட்டச்சத்து சாப்பிடுகிறீர்களா ஏனெனில் நாம் உணவை நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு சாப்பிடக்கூடாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.