பசில் ராஜபக்சே, தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டில் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக கொழும்பு சிங்கள நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பசில் ராஜபக்சே நாளை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அவர் நாளை காலை 11 மணி அளவில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகின.இந்த பதவியை ராஜினாமா செய்த பின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.