Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பசி இல்லையா? வீட்டு வைத்தியம் இருக்க பயமேன்…!!

பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம். 

சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும்.

வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும்.

வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு வர பசியை தூண்டும்.

ஓமம், சுக்கு, தனியா ஆகியவற்றை நன்றாக பொடித்து வைக்கவும். பின்பு ஒரு சிட்டிகை பொடித்ததை எடுத்து புழுங்கல் அரிசி கஞ்சியுடன் கலந்து சாதாரண உப்புக்குப் பதிலாக இந்துப்பு கலந்து வெதுவெதுப்பாக குடித்து வந்தால் மலச்சிக்கல் இருக்காது. இந்த கஞ்சி செரித்த பிறகு பசி எடுத்தால் அடுத்த உணவை சாப்பிடலாம்.

அதனிடையே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெட்டி வேர் 15 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு அரை லிட்டராக ஆகும் வரை காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டிய தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த மூலிகை தண்ணீரை குடித்து வருவதினால் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றி மப்பு நிலை ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

Categories

Tech |