Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பசி கொடுமையால் இப்படி செய்தேன்” நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் கல்லூரி சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு வாலிபர் மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்தார். அப்போது மேரி அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது. இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக வேலையில்லாமல் சுற்றி திரிந்த மகேந்திரன் உணவு சாப்பிட கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார். இதனால் பசி கொடுமை தாங்க முடியாமல் நகை பறிப்பில் ஈடுபட்டதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். அவருக்கு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |