Categories
உலக செய்திகள் கொரோனா

பசி பட்டினி…கொரோனா அச்சம்… மாதம் 10,000 குழந்தைகள் பலி.. ஐ.நா சபை கணக்கீடு..!!

பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், தற்போது கொரோனாவின் தாக்குதல் அதை பன்மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிப்போன வயிறு, குச்சிப் போன்ற மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்து போன கண்கள் என பல கோடி குழந்தைகளும், சிறுவர்களும் போதிய உணவும், ஊட்டச் சத்தும் இல்லாமல் உலகில் தினம்தோறும் செத்து பிழைக்கிறார்கள்.

‌‌‌‌ இதனை கணக்கிட்டு ஐநா. அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

1. கொரோனாவால் தற்போது அதிகரித்து வரும் பட்டினி, 30 சதவிகித மக்களை பாதித்துள்ளது.

2 ‘கொரோனா வைரசால்  ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களும் பட்டினி நிறைந்த சமூகத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் தற்போது ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கின்றன.

3. ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது நெடுநாள் பிரச்னையாக இருக்கிறது. இது ஒரு தனிமனித பிரச்னை என்பது மாறி ஒரு தலைமுறையின் பேரழிவாகத் தற்போது உருவெடுத்திருக்கிறது.

4. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பட்டினியைக் குறைக்க, உடனடியாக ரூ.17, 760 கோடி செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

5. பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால். ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர்குலைந்து விட்டன. ஊட்டச்சத்து வழங்கும் உணவுத் திட்டம் செயலிழந்துு விட்டது. இதனால். உலகளவில் மிகப்பெரிய தீமை உருவாக்கப்பட்டு வருகின்றன.

6. ஆப்கானிஸ்தானில் இந்த ஒரு ஆண்டில் மட்டுமே, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை 10 மடங்காக அதிகரித்து விட்டது. பட்டினியின் சிவப்பு நிறமாக மாறியுள்ள இந்த நாட்டில், 5ல் ஒரு இளம் குழந்தை உயிரிழந்துள்ளது.

7. பட்டினியால் மிகுதியாக வாடும் ஆப்ரிக்காவின் சூடான் பகுதியில் 9.6 லட்சம் மக்கள் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு நாளை கழிக்கின்றனர். இந்த பட்டினி விகிதம் இந்த வருடம் மட்டுமே 65 சதவிகிதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வேதனைக்குரிய செயலாக உள்ளது.

8. கொரோனா பரவல், ஊரடங்குக்குப் பின்னர் மூன்று வேளை உணவு என்றிருந்த பல நாடுகளிலும் தற்போது இதுதான் பொதுவான நிலைமையாகவும் உள்ளது.  இவ்வாறு ஐநா அமைப்புகள் தெரிவித்திருகின்றன.

* இரட்டை குழந்தைகளின் பலி, பட்டினியின் கொடூர உச்சம், பற்றி வெனிசுலாவில் மருத்துவராகப் பணியாற்றி வரும் பிரான்சிஸ்கோ நியேட்டோ கூறும்போது, ‘‘கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய 2 மாதங்களுக்குப் பின், 18 மாதமான இரட்டைக்  குழந்தைகளின் இறந்த உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. காரணத்தைக் கண்டறிய முயன்ற போதுதான் வலிமிகுந்த உண்மை தெரிய வந்தது. அந்த பிஞ்சு குழந்தைகளின் தாயார் வேலை இல்லாமல் தன் வயதான தாயாரோடு வசித்து வந்தார். குழந்தைகளுக்குப் பால், உணவு எதும் கொடுக்க இயலாமல், வாழைப்பழத்தை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதுதான் அக்குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக ஆகிவிட்டது,’’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |