ஜார்க்கண்ட் மாநிலத்தில் 63 வயதுடைய மூதாட்டி பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாவட்டம், மந்தர் பகுதியில்
63 வயதுடைய துகியா என்ற மூதாட்டி பசி மற்றும் நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திய தாகவும், அவர் தனது சகோதரி மற்றும் 22 வயதுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .
பின்னர் அந்த மூதாட்டி அந்த பகுதியில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று மூன்று ஆண்டுகளாக வசித்து வந்தார். அந்த பாட்டிக்கு ஒரு சேவகர் ஒரு அறையை கொடுத்து தங்க வைத்திருந்தார். மேலும் நோய் தொற்று ஏற்பட்டதால் குடும்பம் வறுமைக்கு ஆளானது. மூதாட்டியிடம் ரேஷன் கார்டுகளை வழங்குமாறு பலரும் தெரிவித்த அவர் வழங்க மறுத்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் வியாபாரி 10 முதல் 15 கிலோ அரிசி வழங்குகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.