Categories
தேசிய செய்திகள்

பசுக்களால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்…. முதல்வர் அதிரடி பேச்சு….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பசுக்கள் மற்றும் ஆடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது என்றும் அவை மிகவும் நமக்கு முக்கியமானவை ஆகும். முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம் நீர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்.

மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை பூச்சிக்கொல்லி முதல் மருந்துகள் வரை பல முக்கியமான பொருட்கள் தயாரிக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறினார். இதையடுத்து பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பசுக்களை பாதுகாப்பதற்கும் பசு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு 6 அமைச்சர்கள் கொண்ட பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |