Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுக்களைக் காக்கும் முயற்சி… கழுத்தில் ஒளிரக்கூடிய பெல்ட்டுகள்… சமூக ஆர்வலர்களின் செயல் …!!

கோவில் பசுக்களில் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் கழுத்தில் சமூக ஆர்வலர்கள் ஒளிரும் பெல்ட்டுகளை அணிவித்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளது. இந்தப் பசுக்கள் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள் கோவில்  பசுக்களின் கழுத்தில் இரவு நேரங்களில்  ஒளிரக்கூடிய பெல்ட்டை  அணிவித்துள்ளனர். இதனால் இரவு நேரத்தில்  வாகனங்களிள்  அடிப்பட்டு பசுக்கள் உயிரிழக்கும் அபாயம் இல்லை.

Categories

Tech |