கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து பிற பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அந்த நாட்டின் கடற்படையினர் நேற்று பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் திடீரென அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்பிலோ பகுதியில் 3 சிறிய நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஒரு அதிவேக படகு ஆகியவற்றில் 7.41 கொகெய்ன் போதை பொருளை கப்பற்படையினர் கைப்பற்றினார்கள். இந்த போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு 249 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போதை பொருளை கடத்தி வந்த 6 பேரை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, 3 பேர் ஈகுவடாரை சேர்ந்தவர் என்றும் மற்ற 3 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.