பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சுற்றுச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 2 தனிநபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதற்கு வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.