தேவர் திருமகனாரின் குருபூஜை வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவரது சிலைக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட தங்க கவசம் மதுரை வங்கியிலிருந்து பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 58-ஆம் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேவர் திருமகனாருக்கு அணிவிக்க மாண்புமிகு அம்மாவால் அளிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் மதுரை வங்கியில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தங்க கவசம் பசும்பொன் தேவர் நினைவாலய காப்பாளர் திருமதி காந்தி மீனாள் தலைமையில் எடுக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தங்க கவசம் இன்று முதல் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை தேவர் நினைவகத்தில் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் 2-ம் தேதி மீண்டும் வங்கிகள் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.