Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்”… வைகோ புகழாரம்…!!!!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் விதமாக வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்த படையினர் சிட்டகாங் எல்லையில் வரை தீரத்துடன் போரிட்டுள்ளனர் அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கியுள்ளார். நான் சிறுவயதில் இருக்கும்போது அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் அவர் மீது எனக்கு பற்று பாசம் இருக்கிறது. மேலும் நான் கடந்த 46 வருடங்களாக தேவர் குரு பூஜையில் பங்கேற்று வருகின்றேன் கொரோனா பாதிப்பின் போது ஒரு வருடம் வரவில்லை. அதேபோல் ஜெயில் இருந்ததால் ஒரு வருடம் வரவில்லை. தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் ஜாதி, மதம், இனம் வேறுபாடுகளை கடந்து சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றார்கள்.

மேலும் இங்கு ஜாதி மதத்திற்கு இடமில்லை இங்குள்ள கவர்னர் அபாண்டமாக பேசுகிறார் அவதூறாக பேசுகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து செல்ல ஆயத்தம் செய்துள்ளார். ஆனால் அப்போது மீனாட்சி அம்மன் கோவில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஒரு கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. அப்போது பசும்பொன் தேவர் துண்டு பிரச்சாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும் அவர்களை யாரேனும் தடுத்தால் நானே அங்கு வருவேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். பசும்பொன் தேவரின் இந்த துண்டு பிரச்சாரம் எதிர்ப்பாளர்களை விரட்டி அடித்துள்ளது. அதன் பின் தமிழகத்தில் ஜாதி, மதம் வேறுபாடு இல்லை இங்கு தேசங்களும் இடமில்லை தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |