Categories
தேசிய செய்திகள்

பசுவின் இருப்பிடத்தை மாற்றிய தாசில்தார்… கோபத்தில் அரை மணி நேரம் விடாமல் துரத்திய பசு… வைரலாகும் வீடியோ பதிவு…!!

தாசில்தார் ஒருவரை பசுமாடு ஒன்று அரை மணி நேரமாக விரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பசுமாடு ஒன்று காரில் வந்த தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரமாக விடாமல் விரட்டி உள்ளது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு அவர் நிறுத்திய காரின் முன் வந்து நின்று அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு மறைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி அருகே சென்று காரை இயக்கும்போது தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது. இதுபற்றி உள்ளூர்வாசிகள் கூறும்பொழுது அப்பகுதியில் அப்பசு தங்கியிருந்த கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ததால் பசுவானது கோபத்தில் அவரை விடாமல் துரத்துகிறது என்று கூறினர்.

Categories

Tech |