பசுவின் கோமியத்தை குடிப்பதால் கொரோனாவை எதிர்த்துப் போராடும் தன்மை கிடைக்கும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநில பாஜக தொண்டர்கள் இடையே துர்காபூரில் காணொளிக் காட்சி வழியாக பேசிய பாஜக தலைவர்,”நான் பசுவை பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது. கழுதைகளுக்கு பசுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இது இந்தியா பசுவை தெய்வமாக வழிபட்ட கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம்.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும். மது குடிப்பவர்களுக்கு அருமையை தெரிந்து கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் பசுவின் கோமியத்தை குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளருவதால் அது நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவைக்கும்” என்று திலீப் கூறியுள்ளார். அவரின் இத்தகைய பேச்சுக்கு அவர் கட்சியில் இருக்கும் பாஜகவை சேர்ந்த சிலரே “இது அறிவியல் பூர்வமானதல்ல” என்று விமர்சித்துள்ளனர்.