கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு பசுவின் கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாட்டு சாணம் கொள்முதல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து கோமியத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கோமியம் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் திரவ கரிம உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 கால்நடை காப்பகங்கள் மூலம் பசுவின் கோமியத்தை அரசு கொள்முதல் செய்ய இருக்கிறது. பசுவின் கோமியத்தை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.4 கொடுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.