Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தை பலாத்காரம்…. தந்தையின் வெறிச்செயல்…. தாய் உடந்தை…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

குஜராத்தின் ராஜ்கோட்டை நோக்கி தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து 16 மாத பெண் குழந்தையுடன் கணவன்-மனைவி இருவரும் ரயிலில் பயணித்தனர். அப்போது குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். அவர் உடனே ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் வந்ததும் ரயிலிலிருந்து கணவன் மனைவி இருவரும் இறக்கிவிடப்பட்டனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை இறந்திருப்பதும் அதற்கு காரணம் பாலியல் தொந்தரவு என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பச்சிளம் குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் அதற்கு தாயும் உடந்தையாக இருந்ததோடு குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதையும் போலீசார் அறிந்தனர். இதையடுத்து இறந்த குழந்தையை ரகசியமாக சொந்த ஊரில் வைத்து அடக்கம் செய்வதற்காக ரயிலில் வந்த போது இருவரும் வசமாக சிக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீசார் கணவன் மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |