Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலர் நியமிக்க கோரிக்கை …!!

பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்களை அநீதியாக பணி நீக்கம் செய்த அறக்கட்டளை தலைவர் திரு. சண்முகத்தை நீக்கிவிட்டு கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி அறக்கட்டளைக்கு தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் குறுக்கு வழியில் அறக்கட்டளையின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டதாக கூறினார்.

தொடர்ந்து 152 பேராசிரியர்களுக்கு ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு அவர்களின் பதில்களை  கூட பெறாமல் அநீதியாக பணி நியமன ஆணைகளை ரத்து செய்துள்ளார் என்றும். இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் செயல்படும் ஆறு கல்லூரிகளுக்கும் தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |