சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர்.
மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு பகுதியில் இரண்டு பேர் அவர்களுடன் காரில் ஏற்றிக் கொண்டார்கள். மதுரவாயில் பைபாஸ் சாலையில் கார் சென்றபோது திடீரென காரில் இருந்து நான்கு பேரும் சேர்ந்து விக்கேசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 60000 பணம், ஏடிஎம் கார்டு, செல்ஃபோன், லேப்டாப் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர். அதன்பின் போரூர் சுங்கச்சாவடி அருகே ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு 4 பேரும் தப்பித்து விட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் காயமடைந்த விக்கியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கொன்ட கும்பலை தேடி வருகின்றனர்.