பிரிட்டன் அரசு கொரோனா தொற்றின் அடிப்படையில் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் வரும் 17ஆம் தேதியிலிருந்து நாட்டு மக்களை பிற நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதிதாக நேற்று அரசு Green List Countries வெளியிட்டிருக்கிறது. கொரோனா பரவலை அடிப்படையாக கொண்டு உலகில் இருக்கும் நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்று மூன்று விதமாக பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். அதாவது பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள எந்த விதிமுறைகளும் கிடையாது. மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்று வரும் பிரிட்டன் மக்கள் குறைந்தபட்சம் 5 தினங்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டு இரண்டு முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதே போன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்று வரும் மக்கள் தங்கள் செலவில் 1,750 பவுண்டு தொகையை அரசாங்கம் அங்கீகரித்த ஓட்டலில் செலுத்தி சுமார் 11 தினங்களுக்கு தனிமைப்படுத்தவேண்டும். இதனிடையே இரண்டுமுறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகள், இஸ்ரேல், போர்ச்சுக்கல், அசோர்ஸ், மடிரா தீவுகள், சிங்கப்பூர், ஐஸ்லாந்து தீவுகள், நியூஸிலாந்து, ஜிப்ரால்டர் பால்க்லேண்ட் தீவுகள், ஆஸ்திரேலியா, தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள், செயிண்ட் ஹெலினா மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா, அசென்ஷன் போன்றவை ஆகும்.