Categories
மாநில செய்திகள்

பச்சை பொய் அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்… வைகைச்செல்வன் ஆவேசம்…!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள போது அதாவது, 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வெள்ளை அறிக்கைக்கு அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் பச்சை பொய் அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |