Categories
அரசியல் மாநில செய்திகள்

பச்சை பொய் பழனிசாமி… தட்டி கேக்க திராணி இல்லா ADMK…. கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ?  அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ?  என்று தெரியவில்லை.

2012, 2013, 2014 தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் எல்லாம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதையெல்லாம் இவருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். அதுபோன்ற ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார், இதை குறைபாடுகளுக்காக சொல்லவில்லை.  எந்த சூழலில் ஒரு போராட்டம் நடத்துபவர்கள் உரிமை அவர்களுக்கு, மின் கட்டணத்திற்கும், வீட்டு வரி உயர்வு, நடத்தக்கூடிய போராட்டம் நடத்தக்கூடியவர்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு இதற்கெல்லாம் சேர்த்து அவர்கள் போராட்டம் நடத்தலாம்.

உண்மையாலுமே அவர்களுக்கு நேத்து கேட்ட கேள்விகளுக்கு கூட நாடாளுமன்றத்தில் அவர்களுடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். இங்கே தொழிற்சங்கம் ஒரு பக்கம் கலந்து கொள்கிறார்கள் போராட்டங்களில்…. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள்,  அவர் எடுக்கக்கூடிய முடிவுகள்,  வேறு விதமாக உள்ளது.

ஆக இங்க ஒரு கருத்தையும்,  நாடாளுமன்றத்தில் அவர்களை செயல்பாடுகள் கருத்தும்,  அதிமுக செய்யக்கூடிய சூழல் வேறு மாதிரி இருக்கிறது. ஏனென்றால் அவர்களை பொறுத்தவரையில் எஜமானர் பிஜேபி. பிஜேபி தான் அதிமுகவினுடைய எஜமானர், அவர்கள் அந்த எஜமானர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கேட்க முடியும். சுயமாக செயல்பட முடியாது. சுயமாக செயல்படும் அளவிற்கு என்ன இருக்கு என விமர்சித்தார்.

Categories

Tech |