நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கேரளாவில் தோன்றிய பறவை காய்ச்சல் தற்போது இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. அதனால் அனைத்து மக்களும் அச்சமடைந்துள்ளனர். எல்லைகளில் கண்காணிப்பு பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலை தடுப்பதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இறைச்சிகளை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இறந்து கிடப்பதை பார்த்தால் அதை எடுக்காமல் உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்கு தகவல் என்று அறிவுறுத்தியுள்ளது.