பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 பி.ஹெச்.பி. திறன், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பஜாஜ் டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள என்ஜின் கே.டி.எம். 250 டியூக் பிளாட்பார்மை சார்ந்து, சற்றே வித்தியாசமான டியூனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஒட்டுமொத்த தோற்றம் டாமினர் 400 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.