பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மூன்றாவது நாளாக குடிசைகள் அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியில் இருக்கும் பஞ்சமி நிலம் எனக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 19ஆம் தேதி அப்பகுதியில் குடிசைகள் அமைத்து ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பேசு வார்த்தை நடத்தியதில் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதனிடையே மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் வீடு இல்லாதவர்கள் மனு கொடுத்தால் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
ஆனால் ஆட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இதன் பின்னர் ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் ஒரு சில போராட்டக்காரர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார்கள்.